2025 மே 21, புதன்கிழமை

சந்தோஷத்தின் உச்சியில் நயன்தாரா...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரபரப்புக்களுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத நாயகி நயன்தாரா. பிரபுதேவா காதல் விவகாரத்தால் தனது பெயரை உலகளவில் கெடுத்துக்கொண்டாலும்  அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பெரும் வெற்றி பெற்றதால் சந்தோஷமாக இருக்கிறாராம் நயன்.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வருகின்ற போதிலும் அனைத்தையும் முழுவதுமாக நிராகரித்துவிடுகிறார் நயன். "இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்வதாக இல்லை. நீண்ட ஓய்வில் இருக்கிறேன். அதேநேரம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார் நயன்தாரா.

இப்போதைக்கு தெலுங்கில் சீதா வேடத்தில் நடிக்கும் படம் மட்டுமே கைவசம். மலையாளப் படத்தையும் முடித்துவிட்டார். அப்படியெனில் சினிமாவிலிருந்து ஓய்வுதானா?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்தாரா "அது பற்றி உறுதியாக சொல்வதற்கில்லை. சமீபத்தில் கூட என்னை சாவித்ரி என்ற படத்தில் நடிக்கக் கேட்டார்கள்.

மிக அருமையான கதை, கதாபாத்திரம் ஆனால் வேண்டாம் என மறுத்துவிட்டேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போதைக்கு படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். நீண்ட ஓய்வுதான் எனக்கு இப்போது முக்கியம். வேறு எதையும் கேட்காதீர்கள்" என்று கூறி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளார் நயன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X