Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசினுக்கும் சல்மான்கானுக்கும் மும்பையில் நேற்று இரகசியத் திருமணம் நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான அசின் கஜினி திரைப்படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று இருவரும் இரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை மற்றும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அசின் தனது பெற்றோருக்கு தெரியாமல் பஞ்சாபி முறைப்படி இந்த திருமணத்தைச் செய்துகொண்டதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அசின், 'எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ புகைப்படம் எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே செய்தி பரப்பி விட்டுள்ளனர்' என்று விளக்கமளித்துள்ளார் அசின். சரி பொறுத்திருந்து பார்ப்போமே. கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025