Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யாவின் 'காக்ககாக்க' திரைப்படம் திரைக்கு வந்ததன் பின்னர் பொலிஸ் என்றாலே ஒரு பெருமையாக இருக்கிறது என உண்மையான பொலிஸ் அதிகாரிகள் பலரே நேரடியாக பாராட்டியிருந்தனர். அந்தளவுக்கு தத்ரூபமாக தனது நடிப்பை வெளிக்காட்டியவர் நடிகர் சூர்யா. ஆதனை தொடர்ந்து 'சிங்கம்' படத்திலும் காக்கி உடையில் கர்ச்சித்தவர் சூர்யா.
தன்னுடைய அண்ணன் காக்கிக்கு கௌரவத்தை தேடிக்கொடுத்தது போலவே இப்பொழுது கார்த்தியும் காக்கிக்குள் புகுந்திருக்கிறார். 'சிறுத்தை' படத்திற்காக இரட்டை வேடத்தில் முதல்முதலாக கலக்கவிருக்கும் கார்த்தி, ஒரு பாத்திரம் பொலிஸ் வேடமாம். இந்த பாத்திரமும் காக்கிக்கு மரியாதை கொடுக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
சூர்யா திரைக்கு வந்து நீண்ட காலத்திற்கு பின்னர்தான் பிரபலமானார். ஆனால் தனது முதலாவது படத்திலேயே புகழின் உச்சியைத் தொட்டவர் கார்த்தி. ஒவ்வொரு கதாபாத்திரத்தினையும் தன்னுடைய பாணிக்கு ஏற்றாற்போல் மாற்றி வெளுத்துக்கட்டுவதில் அண்ணனை மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது கார்த்தியின் வளர்ச்சி.
'சிறுத்தை' திரைப்படம் தைப்பொங்கலுக்கு வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் கார்த்தியின் காக்கி பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றமை சிறப்பானதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025