Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் நடிகர் மாதவன். 'மன்மதன் அம்பு' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வசூலுக்கு பாதகமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பது ஒரு காரணம், மற்றையது கமலுடன் மறுபடியும் இணைந்து வெற்றிப்படத்தினை கொடுத்திருப்பது.
படம் வெளிவந்ததும் சென்னை திரையரங்கொன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து 'மன்மதன் அம்பு' படத்தினை பார்த்திருக்கிறார். ரசிகர்கள் அப்படத்திற்கு கொடுத்த வரவேற்பில் புல்லரித்துப் போய்விட்டாராம் மாதவன். இந்த அனுபவம் பற்றி அவர் குறிப்பிடுகையில்...
'கமலுடன் இணைந்து நடிப்பது இதுவொன்றும் முதன்முறையல்ல. அதேபோல் இது கடைசியாகவும் இருக்கப்போவதில்லை. எப்போதும் என்னுடைய அன்புக்குரிய கலைஞர் கமல் தான். அவருடன் சேர்ந்து மறுபடியும் நடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. ரசிகர்கள் இப்படத்திற்கு வழங்குகின்ற வரவேற்பை பார்க்கின்றபோ அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல.
குடிகாரனா நான் பேசுகின்ற வசனங்களை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள். எனக்குள் இருக்கின்ற நடிப்பு திறனை முழுமையாக வெளிக்காட்டிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கமல் சாருக்கும் நிறையவே நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கேன்...' என்று மனமுருக கூறியிருக்கிறார் நடிகர் மாதவன்.
கமலின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'மன்மதன் அம்பு' திரைப்படம் உலகின் பல பாகங்களிலும் சக்கைபோடு போடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
yarro oruvan Thursday, 30 December 2010 12:50 AM
மாதவன் ஒரு நல்ல நடிகர் & திறமைசாலி.
Reply : 0 0
haleem Monday, 10 January 2011 08:15 PM
Kuruwum sisyanum. Rompawea nalla poruththam.
Reply : 0 0
Mrs. Selvakumar Tuesday, 11 January 2011 03:45 PM
மாதவன் இஸ் எ குட் அக்டர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025