Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 05 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
'லக்' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகியவர் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது தமிழில் '7ஆம் அறிவு', தெலுங்கில் சித்திக்குடன் மற்றுமொரு படம் என ரொம்ப தாராளமாக நடித்துவருகிறார்.
ஸ்ருதியின் நடிப்பில் இம்மாதம் 28ஆம் திகதி வெளிவரவிருக்கும் மற்றுமொரு ஹிந்திப்படம் 'தில் தோஹ் பச்சா ஹாய் ஜி'. இப்படத்தில் எம்ரான் ஹஸ்மியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இதில் தாராளமாகவே கவர்ச்சி காட்சியிருக்கிறாராம் ஸ்ருதி. இப்படத்தில் ஸ்ருதியுடன் ஜோடி சேர்ந்தது பற்றி எம்ரான் ஹஸ்மி குறிப்பிடுகையில்...
'ஸ்ருதி போன்ற தரமான ஒரு நடிகையுடன் சேர்ந்து நடிக்கக்கிடைத்தமை எனக்கு பெருமையாக இருக்கிறது. ஸ்ருதி அழகான, எளிமையான ஒரு நடிகை. எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார். தன்னந்தனியாக நின்று திரையுலகில் சாதிக்கத் துடிக்கும் இதுபோன்ற நடிகைகளை காண்பது அரிது. அயராத முயற்சியினால் முன்னுக்கு வரத் துடிக்கும் ஸ்ருதி நிச்சயம் இத்துறையில் சாதிப்பார்' என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.
தாராள மனதுடன் திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் ஸ்ருதி, இம்மாதம் 28ஆம் திகதி வெளிவரவிருக்கும் 'தில் தோஹ் பச்சா ஹாய் ஜி' படத்தினை பெரிதும் நம்பியிருக்கிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025