2025 மே 21, புதன்கிழமை

விஜயின் ஆவேசம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 20 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சிலர் சதி தீட்டி வருவதாகவும் அந்த சதிகளை ரசிகர்களின் முயற்சியுடன் முடிப்பேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. அண்மைக் காலங்களாக வெளியான விஜய் படங்களில் இந்தப் படம் பரவாயில்லை என்று கூட சில விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன.

இந்நிலையில், இந்தப் திரைப்படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பதாதைகள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

இதையடுத்தே, 'தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக' விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

'எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் வெளியாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் வெளியாகும் போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.

இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன். அந்த வகையில் காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்,' என்றார் விஜய்.


You May Also Like

  Comments - 0

  • jana Tuesday, 25 January 2011 01:51 PM

    விஜய் கவலைபடாதிங்க. உங்களுக்கு நாங்க இருக்கம்.
    முதுகுல குத்துறவன் எல்லாம் உங்க கூட மோத தகுதி இல்லாதவன். பயந்தவங்கள் தான் அவங்க. உங்களுக்கு எப்பவும் ரசிகர்கள் நாங்க இருக்கம்.

    Reply : 0       0

    sooriyan Wednesday, 26 January 2011 04:48 PM

    ஏதாவது கதை சொல்லி இந்தப்படத்தின் தோல்வியையும் மறச்சிட முடியுமா? ஸ்டார் என்று சொல்லும் ஆட்களின் படங்களைவிட புது முகங்களின்இ அடை மொழி இல்லாத நடிகர் படங்கள் ரசனை மிக்க புதுக் கதை உடைய சிறந்த படங்கள் வெளியாகும் இக்காலத்தில் இப்படி கதை சொல்லுவது சஹாகம அப்பா..

    Reply : 0       0

    safaa Wednesday, 26 January 2011 10:26 PM

    thamil padi

    Reply : 0       0

    Thirucumaran Thursday, 27 January 2011 10:15 PM

    இன்னுமொரு தோல்விக்கு ஒரு சாட்டு! மசாலா படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் கருத்துள்ள படத்தில் நடித்தால், ஏன் இந்த தேவையில்லாத பிரச்சனைகள்?

    Reply : 0       0

    Rasikan Wednesday, 02 February 2011 03:46 PM

    இந்த நடிக்க தெரியாத நடிகர்ட தொல்லை தாங்க முடியல சாமி........பேசாம நீங்க டெலி டிராமாவில நடிங்க ஓடும்.

    ரசிகன்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X