2025 மே 21, புதன்கிழமை

ஹிந்தியில் தயாராகும் 'காவலன்'

A.P.Mathan   / 2011 ஜனவரி 23 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சித்திக்கின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளிவந்து வசூலுக்கு பாதகமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் 'காவலன்' படத்தினை ஹிந்தியில் இயக்கத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் சித்திக்.

தெலுங்கில் வெளியாகிய 'பொடிகார்ட்' படத்தினை அப்படியே தமிழில் காவலனாக உருவாக்கினார் சித்திக். இப்பொழுது காவலன் படத்தினை ஹிந்தியில் சல்மான்கானினை வைத்து 'மை லவ் ஸ்டோரி' என்னும் பெயரில் உருவாக்கி வருகிறார்.

சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி இப்படத்தினை தயாரிக்கிறார். ரிலைன்ஸ் பிக்ஸர்ஸ் விநியோக உரிமையினை பெற்றிருக்கிறது. தமிழில் வெளியாகிய படத்தினை ஹிந்தியில் ரீமேக் பண்ணி அதில் சல்மான்கான் நடிப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகிய 'போக்கிரி' படத்தினை ஹிந்தியில் 'வோன்டட்' என்று உருவாக்கியபோது அதில் சல்மான்கான் நடித்திருந்தார். இப்பொழுது மற்றுமொரு விஜய் பட ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கிறார்.

கடந்த 17ஆம் திகதி இப்படத்தின் படப்பிடிப்பினை இயக்குநர் சித்திக் தொடங்கிவிட்டார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரைக்குவரும் வகையில் படப்பிடிப்பினை துரிதப்படுத்திவருகிறார் சித்திக். இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X