2025 மே 21, புதன்கிழமை

சேரனின் 'அடுத்த தலைமுறை'

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரமான பல படங்களை தமிழ் திரையுலகுக்கு தந்த இயக்குநர் சேரன் தற்சமயம் நடிப்பில் பெரும் அக்கறை காட்டிவருகிறார். இருந்தபோதிலும் அவ்வப்போது சில படங்களையும் இயக்கத் தவறுவதில்லை.

காதல் பாத்திரங்களில் நடித்துவந்த சேரன் முதல் முதலாக மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'யுத்தம் செய்' படத்தின் மூலம் அக்ஷன் கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார். இத்திரைப்படம் எதிர்வரும் 4ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கல்பாத்தி அகோரத்தின் தயாரிப்பில் உருவாகும் 'அடுத்த தலைமுறை' திரைப்படத்தினை இயக்கவுள்ளார் சேரன். இது இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கும் படமாகும். இப்படத்தில் 10 இளைஞர்கள் நடிக்கவுள்ளார்கள்.

மதுரையினை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் 'அடுத்த தலைமுறை' இளைஞர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்குமென எதிர்வுகூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் மற்றுமொரு சிறப்பம்சமும் இருக்கிறது.

இயக்குநர் மிஷ்கினின் தம்பி சுவாமிநாதன் 'அடுத்த தலைமுறை'யில் நடிக்கவிருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாக இவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

விரைவில் தொடங்கவுள்ள 'அடுத்த தலைமுறை' படப்பிடிப்பு சம்பந்தமாக மும்முரமாக இருக்கிறாராம் இயக்குநர் சேரன். வெகுவிரைவில் 'அடுத்த தலைமுறை' திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • Diwakar Friday, 28 January 2011 06:07 AM

    வாழ்த்துக்கள் சேரன்

    Reply : 0       0

    fazil Wednesday, 09 February 2011 11:39 AM

    நல்ல யூகம் உள்ள மனிதன் .வாழ்க வளமுடன் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X