2025 மே 21, புதன்கிழமை

மலையாளம் பறையும் ஆர்யா...

A.P.Mathan   / 2011 ஜனவரி 27 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகிவரும் 'உருமி' படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த பாத்திரம் இப்பொழுது ஆர்யாவின் கைக்குக் கிடைத்துள்ளது. இது ஆர்யாவின் முதல் மலையாள படமாகும்.

பல முன்னணி நட்சத்திரங்களை உள்வாங்கி 'உருமி' உருவாகி வருகின்றமை தெரிந்ததே. இத்திரைப்படத்தில் ஆரம்பத்தில் விக்ரம் முக்கிய பாத்திரமொன்றில் நடிப்பதாக இருந்தது. இறுதிநேரத்தில் விக்ரமினால் 'உருமி' திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். ஆகையினால் அவருக்கு ஈடுகொடுக்கக்கூடிய முன்னணி நடிகரை சந்தோஷ் சிவன் தேடியபோது ஆர்யா முதன்நிலைப்படுத்தப்பட்டாராம். அன்புக்குரிய நடிகர் என பெயரெடுத்துள்ள ஆர்யா, இப்பொழுது மலையாளம் பேச தயாராகிவிட்டாராம்.

தற்சமயம் பாலாவின் இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. 'உறுமி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ள ஆர்யா முழுமையாக மூன்று நாட்களை ஒதுக்கியுள்ளாராம். மங்களூர் உடுப்பியில் 'உறுமி' படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் ஆர்யா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X