2025 மே 21, புதன்கிழமை

வந்ததும் வென்றார் தப்ஸி...

A.P.Mathan   / 2011 ஜனவரி 31 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஆடுகளம்' படத்தில் தனுஷுடன் நடித்தவர் தப்ஸி. பெயர் எப்படி வித்தியாசமாகவுள்ளதோ அதேபோல் ஆளும் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். மொடல் அழகியான தப்ஸி, தெலுங்கில் பிரபலமான கதாநாயகி. அவரை அழைத்து வந்து ஆடுகளத்தில் புகுத்திவிட்டார்கள்.

பொங்கலுக்கு வெளியாகிய படங்களில் நல்லபெயரை தட்டிச்சென்ற படம் 'ஆடுகளம்'. சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இந்த படத்தினை பார்த்துவிட்டு தப்ஸியை ரொம்பவே புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மிகப்பெரிய நடிகரொருவரின் வாயால் நல்வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டதில் பூரிப்படைந்துபோன தப்ஸி, தொடர்ந்தும் தமிழ் படங்களில் நடிக்க உத்தேசித்துள்ளாராம்.

அந்தவகையில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து 'வந்தான் வென்றான்' என்ற படத்தில் நடித்துவருகிறார் தப்ஸி. இப்படத்தினை கண்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஆடுகளம்' திரைப்படத்தினை ஹைதராபாத்திலுள்ள தனது நண்பர்களுக்காக சிறப்பு காட்சியாக போட்டுக் காண்பித்திருக்கிறார் தப்ஸி. அப்படத்தினை பார்த்த நண்பர்கள் எல்லோரும் தப்ஸியின் நடிப்பை பார்த்து வாயார புகழ்ந்திருக்கிறார்கள். தனது நண்பர்களே தமிழ் படத்தினை பார்த்து புகழ்ந்துவிட்டதால் தனக்கு தமிழில் முன்னுக்கு வரமுடியுமென முடிவு பண்ணிவிட்டாராம் தப்ஸி.


You May Also Like

  Comments - 0

  • regan Monday, 14 February 2011 05:19 PM

    நல்லா நடிங்க. முன்னுக்கு வர வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    kaja Sunday, 10 April 2011 09:52 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X