Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தியில் வெளியாகி பல விருதுகளை தட்டிச்சென்ற வெற்றிப்படம் '3 இடியட்ஸ்'. இந்தப்படத்தின் தமிழ் பதிப்பு உரிமையை ஜெமினி நிறுவனத்தினர் பெற்றிருந்தனர். அப்பொழுதிலிருந்து பல புதுப்புது கதைகள் உருவாக ஆரம்பித்தன.
ஆரம்பத்தில் இப்படத்தினை வேறொரு இயக்குநர் இயக்குவதாக இருந்தது. அதன் பின்னர் தமிழ் பதிப்பு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் கைக்கு மாறியது. 'எந்திரன்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் '3 இடியட்ஸ்' தமிழ் வடிவத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
'3 இடியட்ஸ்' என்ற பெயரை பயன்படுத்துவதா அல்லது 'முட்டாள்கள்' என்று பயன்படுத்துவதா என்ற குழப்பத்தோடு ஆரம்பித்த படவேலைகளில் கதாநாயகர் தெரிவு மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ஆரம்பத்தில் விஜயுடன் அஜித் இணைவார் என்று கதைகள் கிளம்பின. அதன்பின்னர் விஜய் மட்டும் எஞ்சியிருந்தார். ஹிந்திப்படத்தில் நடித்த மாதவனையும் தமிழில் நடிக்கவைக்க முயற்சித்தார்கள் ஆனால் அவரும் மறுத்துவிட்டார். இந்நிலையில்தான் விஜயுடன் ஷங்கர் முறண்பட்டார் என்று சொல்லி அவரையும் படத்திலிருந்து தூக்கினார்கள். அதன்பின்னர் நடிகர் சூர்யா இப்படத்தில் சேர்க்கப்பட்டார்.
மூன்று நாயகர்களைக்கொண்ட இப்படத்தின் ஏனைய இருவரும் எந்தவித குழப்பமுமின்றி தெரிவாகிவிட்டார்கள். ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரே மற்றைய இரு கதாநாயகர்கள். பிரதான நாயகன் யார் என்பதிலேயே குழப்பம் நிலவியது. பிரதான நாயகன் யார் என்பது முடிவுபண்ணாமலே கடந்த 25ஆம் திகதி படப்பிடிப்பினை தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். ஜீவாவும் ஸ்ரீகாந்தும் நடித்துக்கொண்டிருக்கும்போது இடையில் சூர்யா இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மறுபடியும் சூர்யா குழப்பம் பண்ணத் தொடங்கியதால் சூர்யாவும் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுபடியும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக அவரும் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு விட்டார்.
இப்பொழுது மூன்று கதாநாயகர்களும் தயார். ஹிந்தியில் அமீர்கான் நடித்த பாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். ஏனைய இருவரில் ஒருவர் ஸ்ரீகாந்த் மற்றையவர் ஜீவா. கதாநாயகியாக இலியானா நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ். தமிழ் பதிப்பிற்கு 'நண்பன்' என உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நண்பன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் சத்தியராஜும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
jappi Wednesday, 09 March 2011 02:12 PM
இவர்களுக்கு வேற வேல இல்ல
Reply : 0 0
muhammed nisath Tuesday, 24 January 2012 07:48 PM
மிஸ்டர் ஜப்பி கருத்து எழுத முடிந்தால் மாத்திரம் write பண்ணுங்கோ ஓகே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025