2025 மே 21, புதன்கிழமை

ரஜினியின் சரித்திர படத்தில் தீபிகா படுகோன்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சரித்திர திரைப்படம் ராணா. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்கவுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் துணை நடிகர்களை தேடி வருகிறார்கள்.

ராணா திரைப்படத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதுவொரு சரித்திர திரைப்படம். இப்படத்தின் மூலமாக இந்தியாவின் பிரபலமான பழைய கோட்டைகளை காணக்கிடைக்குமென இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக யாரை போடலாம் என சல்லடை போட்டு தேடிவருகிறார்கள். ஒருவழியாக தீபிகா படுகோன் ஒரு ஜோடி என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை துணை இயக்குநர் சௌந்தர்யாலும் நடிகை தீபிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீபிகா படுகோன் நடிக்கின்ற முதலாவது தமிழ் திரைப்படம் ராணா என்பது சிறப்பானதாகும். இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்... 'திரையுலகின் சரித்திரமாக திகழும் ரஜினி காந்த்துடன் ஒரு சரித்திரப்படத்தில் நடிக்கக்கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். முதல் தமிழ் படத்திலேயே முத்தான நடிகருடன் நடிக்கக்கிடைத்தது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ராணா திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு மற்றுமொரு மைல் கல்லாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • riyas Tuesday, 22 February 2011 09:07 PM

    படு மோசமான 3 வது படம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X