2025 மே 21, புதன்கிழமை

பொறாமை கொள்ள வைக்கும் ஹன்ஸிகா...

Menaka Mookandi   / 2011 மார்ச் 08 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அப்படி என்னதான் இருக்கு இவரிடம்' என்று சக நாயகிகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு எல்லா கதாநாயகர்களும் கேட்கும் நாயகியாக மாறியுள்ளார் ஹன்ஸிகா மோத்வானி.

இவர் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆயினும் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுவிட்டார் ஹன்ஸிகா. தமிழில் தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். இருப்பினும் இந்தப் படங்களில் ஒன்றுகூட இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் இவர்தான் கதாநாயகி. வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியும் இவரே. இவை தவிர சிம்பு மற்றும் அஜீத் படங்களுக்கும் இவரிடம் திகதி கேட்டுள்ளனர் இயக்குநர்கள்.

தெலுங்கு திரையுலகிலிருந்து மாத்திரம் ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கிறதாம் ஹன்ஸிகாவுக்கு. அப்படி வந்தவற்றில் முக்கியாமானது தில் ராஜுவின் படம். இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதியும் நடிக்கிறார்.

என்றாலும் ஹன்ஸிகாவுக்குத்தான் முதலிடமாம். சித்தார்த்துக்கு ஜோடி. நல்ல சம்பளம் என்றதும், தமிழுக்கு தந்த திகதிகளை பின்தள்ளிவிட்டாராம் ஹன்ஸிகா மோத்வானி.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 09 March 2011 09:02 PM

    "எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று, ஓஹோ ஹோ ஹோ ஹோ எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று உன்னிடம் இருக்கிறது?"

    Reply : 0       0

    sooriayn Thursday, 10 March 2011 02:43 PM

    பார்போம் இந்த பழமாவது இன்னிக்குமா என .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X