2025 மே 21, புதன்கிழமை

தனுஷுக்கு ரஜனி ரசிகர்கள் அர்ச்சனை...

Menaka Mookandi   / 2011 மார்ச் 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்னதான் ரஜனியின் மருமகன் என்றாலும், அவர் சினிமாவில் செய்யும் சில விடயங்கள் என்னவோ ரஜனியின் ரசிகர்களை கடுப்புக்குள்ளாக்கிவிடுகிறது. அந்தவகையில் அண்மையிலும் தனது மாமனாரது ரசிகர்களின் அர்ச்சனைக்கு பாத்திரமாகியுள்ளார் தனுஷ்.

ரஜனி நடித்து, வசூலில் வெற்றிக்கொடி நாட்டிய படம் மாப்பிள்ளை. மெகா ஹிட் படமான மாப்பிள்ளை, இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாகத் தெரியும் படமாக ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இசைஞானி இளையராஜாவின் இசை. அதனால் படத்தின் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்.

குறிப்பாக 'என்னோட ராசி நல்ல ராசி...' என்ற பாடல் சூப்பரோ சூப்பர் ஹிட். இப்போது, இந்தப் படத்தை ரஜனியின் மருமகன் தனுஷ் ரீமேக் செய்துள்ளார். சுராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்தப் படத்தில், 'என்னோட ராசி நல்ல ராசி' பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

ஏனைய ரீமிக்ஸ் பாடல்களைப் போல் இந்தப் பாடல் என்னவோ சரியாக வரவில்லை போலிருக்கிறது. ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடலை குதறி வைத்திருக்கிறார்கள் என்று ரஜனியின் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

மோசமான இசை, பழைய குரலைப் பயன்படுத்தும் நினைப்பில் அதை கையாண்டுள்ள முறை என எல்லா வகையிலும் உண்மையான பாடலை கெடுத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் கோபப்பட்டிருக்கிறார்கள்.

மணிசர்மாவின் இசையமைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடலைக் கேட்ட பல ரஜனி ரசிகர்களும் தனுஷை தங்களால் முடிந்த வரை அர்ச்சனை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் பாடல் அவர்களை எந்த அளவுக்கு கடுப்பேற்றியுள்ளது என்பதற்குச் தனுஷுக்கு கிடைத்த அர்ச்சனையே சான்று!.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X