Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 18 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இரண்டு' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா. இப்போது ரஜினி, கமல் என திரையுலகப் பிரபலங்களுக்கெல்லாம் ஜோடியாகப் பேசப்படும் அளவுக்கு எல்லோர் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்துக்கொண்டார்.
தான் நடிகையான அனுபவம் பற்றி மிகவும் சுவார்ஷயமாக தெரிவித்துள்ள அனுஷ்கா, தான் ஒரு யோகா ஆசிரியை என்பது பற்றியும் யோகா தந்த யோகமே இந்த சினிமா பிரவேசம் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், தனது உடல் அழகின் இரகசியத்தையும் வெளியிட்டுள்ளார்.
'நான் ஒரு யோகா ஆசிரியை. நிறைய பேருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றுதான் இதைப் படித்தேன். நான் நடத்திய யோகா வகுப்புக்கு தெலுங்கு இயக்குனர் ஒருவர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர்தான் என்னை நடிகையாக்கி விட்டார். யோகா மூலம் கிடைத்த யோகம்தான் இந்த சினிமா வாழ்க்கை.'
'
நடிகை பூமிகாவின் கணவராகிய பரத் தாகூர்தான் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த குரு' என்றும் குறிப்பிட்டுள்ள அனுஷ்கா, நகைகள் மீது தனக்கு விருப்பம் இல்லை என்றும் சேலை, நவநாகரிக ஆடைகள் என எந்த விதமான உடைகளை அணிந்தாலும் நகைகள் போட்டுக்கொள்ள மாட்டாராம் அவர்.
அத்துடன், 'நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்தது. சில நேரங்களில் மட்டும், இன்னும் கொஞ்சம் குள்ளமாக இருந்திருக்கலாமோ என்று நான் நினைத்ததுண்டு. தினமும் இரவு 8 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுவேன். எனது உடம்பு இவ்வளவு சிலிம்மாக இருப்பதற்கு அதுதான் காரணம்" என்றும் தனது உடலழகின் இரகசியத்தையும் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025