Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
'படப்பிடிப்பை விட்டு வெளியே வந்ததும் நான் சினிமாவை மறந்துவிடுவேன். இல்லாவிட்டால் என்னைப் போன்ற நடிகைகளுக்கு நிம்மதியே இருக்காது என்று கூறும் அனுஷ்கா, சினிமா வேறு, நிஜம் வேறு. நடிகைகள் வீட்டில் போய் சினிமா பற்றி பேசக்கூடாது. படப்பிடிப்புக்கு வரும்போது வீட்டை மறந்து விட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
அருந்ததி மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. வேட்டைக்காரன், சிங்கம் படங்களில் நடித்துள்ளார். இப்போது விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ்ப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, தனது அடுத்த படத்துக்காக ஹைதராபாத் போன அனுஷ்கா அங்கு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அனுஷ்கா, 'நான் சினிமாவில் அறிமுகமானபோது பெற்றோரும் படப்பிடிப்புக்கு வந்தனர். அவர்கள் முன்னால் சிறப்பாக நடிக்க முடியவில்லை. இதனால் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் கஷ்டம். எனக்கும் சங்கடம். அதனால்தான் இனி யாரும் படப்பிடிப்புக்க என்னுடன் வரக்கூடாது என்று தடுத்து விட்டேன்.
எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தரமான படங்களில் நடிப்பதுதான் முக்கியம். நான் ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படம் போல் பாவித்துதான் நடிக்கிறேன்.
திரையுலகில் படங்கள் தோற்றால் முதல் பலி கதாநாயகிதான். படங்கள் வெற்றி பெற்றால் கதாநாயகிகள் தொடர்ந்து சினிமா துறையில் இருக்க முடியும். தோற்றால் முதல் பலியே அவர்கள்தான். ஹீரோயினை சீண்டக் கூட ஆளிருக்காது. இதைப் புரிந்து கொண்டு படங்களை ஒப்புக் கொள்ள வேண்டும்' என்கிறார் அனுஷ்கா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025