2025 மே 21, புதன்கிழமை

தீபிகாவில் திருப்தியற்ற ரஜினி...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதையம்சத்தைக் கொண்டுள்ள ரஜினியின் ராணா திரைப்படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன் விடயத்தில் திருப்தியற்றுள்ளார் ரஜினி.

இப்படத்துக்கென சமீபத்தில் பிரத்யேக போட்டோ ஷுட் நடத்தப்பட்டது. இதில் ரஜினியையும் தீபிகா படுகோனையையும் விதவிதமான புரதான ஆடைகளில் புகைப்படம் பிடித்தனர். போட்டோக்கள் எடுத்த பிறகு படங்களை பார்த்த ரஜினிக்கு, அந்தப் படங்களில் தீபிகாவின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை.



மேக்கப் பொருத்தமாக இல்லை என்று கூறிய ரஜினி, தீபிகா படுகோனின் தோற்றத்தை 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்கேற்ப மாற்றி, இந்தியத் தன்மைமிக்க அழகியாக்கும்படி மேக்கப் நிபுணர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

ரஜினியின் ராணா திரைப்படத்துக்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தப் படத்துக்காக அட்டகாசமான முறுக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சூப்பர் ஸ்டார். இந்த படத்துக்கான கதைக்கரு ரஜினியுடையது. கே.எஸ்.ரவிக்குமாரும் ரஜினியும் இணைந்து திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.



கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை என்பதால் வரலாற்று கால அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகளை லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எடுக்கின்றனர். ரஜினியுடன் நடிக்க தீபிகா படுகோன், இலியானா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர். தீபிகா படுகோன் இளம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரஜினியுடன் நடிப்பதற்காகவே பிற படங்களின் கால்ஷீட்களை தீபிகா படுகோனே ஒதுக்கிக் கொடுத்துள்ளார். சரித்திர கால படம் என்பதால் பரத நாட்டியம், வஜ்ர முக்தி எனும் சண்டை மற்றும் சமஸ்கிருதம் என பல வித்தைகளையும் கற்று வருகிறார் தீபிகா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X