2025 மே 21, புதன்கிழமை

விஜய் பிறந்த நாளில் 'வேலாயுதம்' ரிலீஸ்...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

விஜய்யின் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் வேலாயுதம் திரைப்படத்தை  அவரது பிறந்தநாளான ஜுன் 22ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகள் 80 வீதமளவில் பூர்த்தியாகியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பானரான ஒஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் திரைப்படத்துக்கான விளம்பரப் பணிகளை ஆரம்பித்துள்ள ரவிச்சந்திரன், இத்திரைப்படம் குறித்து பாரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஆத்துடன் பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமேந்தியுள்ளனர்.

வுப்ஜய் இதில் பால்காரராகவும் ஜெனிலியா பத்திரிகை நிரூபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ள வேலாயுதம் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் எதிர்வரும் ஜுன் 22ஆம் திகதி எதிர்ப்பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0

  • shobiya Tuesday, 24 May 2011 02:24 AM

    nice film

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X