2025 மே 21, புதன்கிழமை

ஆர்வத்தில் மிதக்கும் ஐஸ்....

Menaka Mookandi   / 2011 மே 10 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கதாநாயகிகளை மட்டுமே நம்பி படம் எடுப்பதில் திறமைசாலி என பெயர் எடுத்தவர் மதுர் பண்டர்கர். இவர் அடுத்த இயக்கப் போகும் திரைப்படத்தின் கதாநாயகியாக தெரிவாகியிருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அதற்கான சந்தர்ப்பத்தினை கேன்ஸ் திரைப்பட விழாவின்போது பயன்படுத்திக்கொள்ள மதுர் பண்டர்கர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பண்டகர்கரும், யூ.டி.வி.யும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படமானது ஒரு சினிமா நாயகியின் கதையைச் சொல்வதாக அமைந்துள்ளதாம். இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முழு விருப்பம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார் என்று பண்டர்கர் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக கரீனா கபூரை இப்படத்தின் நாயகியாக்க அணுகினர். ஆனால் சில பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. கரீனா தான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்தே ஐஸ்வர்யாவை தெரிவு செய்துள்ளாராம் பண்டர்கர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X