2025 மே 21, புதன்கிழமை

நிச்சயம் 'ராணா' வெளிவரும்...

A.P.Mathan   / 2011 மே 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூப்பர் ஸ்டார் ரஜனியின் நடிப்பில் வெளிவரவிருந்த 'ராணா' திரைப்படம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 'ராணா' திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை நடைபெற்ற நாளன்றே சூப்பர் ஸ்டார் சுகயீனமுற்று மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். அன்றுமுதல் இன்றுவரை நோயின் பிடியிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் ரஜனி.

இந்நிலையில்தான் 'ராணா' திரைப்படம் இடைநிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவியிருக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக 'ராணா' திரைப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கருத்துத் தெரிவிக்கையில்...

''ராணா திரைப்படம் ஒருபோதும் இடைநிறுத்தப்படமாட்டாது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் கனவுப் படம். அந்த கனவு ஒருநாளும் கலைந்துவிடாது. நோய் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையானதுதான். நோயின் தாக்கம் ஒருவரையும் விட்டுவைப்பதில்லை. நிச்சயமான சூப்பர் ஸ்டார் குணமடைந்து திரும்பி வருவார். அவர் வந்ததும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும். ராணா திரைப்படத்தின் நாயகி தீபிகா படுகோன் எதிர்வரும் ஜூலை மாத்திலிருந்தே தன்னுடைய திகதிகளை எங்களுக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார். ஆகையினால் அதற்கிடையில் ரஜனி பூரண குணமடைந்துவிடுவார். ஆகையினால் ஜூலை மாதத்திலிருந்து ராணா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம்...'' என்று குறிப்பிட்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X