Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 மே 22 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி, ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக வெளியான செய்திகளால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்.
இருப்பினும் ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்களும் அவரது குடும்பத்தாரும் பலமுறை விளக்கிக் கூறியும் எவரும் நம்புவதாக இல்லை.
இந்த நிலையில் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது தனது கையடக்கத் தொலைபேசியில் எடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, 'நான் நலமுடன் இருக்கிறேன்' என்று கூறுவது போல அவர் அந்தப் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ள்;ளார் ரஜினி.
ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதால் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர் ரஜினி குடும்பத்தார். சென்னை இஸபெல் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
இருப்பினும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை விரைவில் வெளியிடுவதாக தனுஷ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
bis Monday, 23 May 2011 09:17 PM
கையில் இருக்கும் பாண்டேச் என்னெவோ எடிட்டிங் போல தெரிகிறது!
Reply : 0 0
xlntgson Monday, 23 May 2011 09:29 PM
தற்கொலை செய்து கொள்வதை விட அவரது இரசிகர்கள் வாழைத்தண்டு இரசம் தயாரித்து தானும் குடிக்கலாம். எல்லாருக்கும் வழங்கலாம்!
மதுவிலக்கு தமிழ்நாட்டில் இல்லாமல் போனதில் இருந்து மதுவுக்கான பிரச்சாரம் கூடிவிட்டது. திரைப்படங்களில் காட்சி தடையானாலும் வசனங்களை பாருங்கள்!
மது ஒழிப்புக்கு பல கோடி செலவு செய்தும் கள்ள சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்று கூறிக்கொண்டுதான் கல்லக்குடி கொண்ட முக கள்ளைக்குடிக்க வழி திறந்து விட்டார். வீசப்படும் வாழைத்தண்டுக்கு இவ்வளவு வீரியம் இருக்கிறது என்றால் சிறுநீரக கோளாறுகள் மறைந்து விடும்!
Reply : 0 0
bis Monday, 23 May 2011 10:20 PM
நன்றாக உற்றுப் பாருங்கள், அந்த பாண்டேச் ஒட்டப்பட்டிருக்கும் திசையை. மேலும் ஊசி போட்ட கையை இப்படி ஸ்டைலாக மடக்கிப் பிடிக்க இது என்ன சினிமாவா?
Reply : 0 0
omg Tuesday, 24 May 2011 03:41 AM
ellame poi ingu , cinimavum poi athai nadippavanum poi,pavam pamara makkal............
Reply : 0 0
ibnuaboo Thursday, 26 May 2011 03:10 AM
சூப்பர் ஸ்டார் பிழைத்தாலும் இந்த பாழாய்ப்போன விசிலடிச்சான் குஞ்சிகளோ செத்திருவானுகள் போலிருக்கே .சினிமா காரங்களே இதுகளை நம்பித்தானே அரசியல்லே இறங்க திரியுறாங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago