2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

விஸ்வரூபம் எடுக்கும் கமல்

A.P.Mathan   / 2011 மே 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செல்வராகவனின் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி நீண்ட நாட்களாக அடிபடத் தொடங்கியிருந்தமையை யாவரும் அறிவார்கள். செல்வராகவனின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் 'விஸ்வரூபம்' உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

டெலி போட்டோ பில்ம் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகவிருப்பதே 'விஸ்வரூபம்'. இந்த படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடிப்பவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் ஹிந்தியில் பிரபலமானவர்.

படப்பிடிப்புகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இயக்குநரை தூக்கியிருக்கிறார்கள். அதாவது படத்தினை விட்டே தூக்கிவிட்டார்களாம். இப்பொழுது விஸ்வரூபம் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லா பாத்திரத்தினையும் தானே வகித்து விஸ்வரூபம் எடுக்கின்றார் கமல்.

நீண்ட இடைவெளியின் பின்னர் சகலகலா வல்லவனாக களமிறங்கும் 'விஸ்வரூபம்' திரைப்படம் பாரிய பொருட்செலவில் உருவாகவிருக்கிறது. இதில் இளவயது கமலின் பாத்திரம் முக்கிய இடம் வகிக்கவிருக்கிறதாம். இதற்காக ஹொலிவூட் கலைஞர்கள் பாடுபடவுள்ளனர்.

கமலில் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் திகதி 'விஸ்வரூபம்' திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0

  • gazzaly Thursday, 02 June 2011 02:08 AM

    மிகவும் நன்றாக இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .