2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கமலோடு கைகோர்க்கும் ஸ்ரேயா

A.P.Mathan   / 2011 மே 30 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஸ்ரேயா ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் இணைந்து நடித்துவிட்டார். அதன்பின்னர் கமலுடன் மர்மயோகியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படம் இடைநிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தபோதில் மீண்டும் கமலுடன் இணையும் சந்தர்ப்பம் ஸ்ரேயாவுக்கு வாய்த்திருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் கவனித்து கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஏற்கனவே ஹிந்தி திரையுலகில் கலக்கல் நாயகி சோனாக்ஷி நடிப்பது உறுதியாகியிருந்தது. இப்போது இரண்டாவது நாயகியாக ஸ்ரேயா நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்திருக்கின்றன. ஆனால் உத்தியோகபூர்வமாக இன்னமும் செய்திகள் வெளிவரவில்லை.

கமலுடன் டூயட் பாடும் சந்தர்ப்பம் விஸ்வரூபத்தில் ஸ்ரேயாவுக்கு கிடைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஸ்ரேயாவின் நிலை என்னவென்பது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X