Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 17 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலா, அ,ஆ படம் மூலம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவினால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். தமிழில் பட வாய்ப்புக்கள் அமாவாசையாகிப் போன நிலையில் புதுடில்லிக்குச் சென்று தங்கிவிட்டார்.
இந்நிலையில், அவர் புதியதொரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளார். நிலாவை பின்தொடர்ந்துள்ள ஒருவர், ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பி தொடர்ந்தும் தொல்லை கொடுத்து வருவதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாராம் நிலா.
இவ்வாறு மின்னஞ்சல் அனுப்புபவனை சும்மா விடக்கூடாது என்று கொதித்துப்போயுள்ள நிலா, அவனை தண்டித்தே ஆக வேண்டும் என்றும் இவனால் என்னால் வெளியில் கூட போக முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிலா, 'இந்த ஆபாச மின்னஞ்சல்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.
அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மின்னஞ்சல்கள் வந்ததால்தான் பொலிஸாரை அணுகினேன்.
இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்று சூடான வார்த்தைகளைக் கொட்டித்தள்ளியுள்ளார் நிலா. பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த ஆபாசப் பேர்வழி என்று.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago