2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'மஹிந்தாகமனய' திரைப்பட பரிசளிப்பு விழா

Kogilavani   / 2011 ஜூன் 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

2600ஆவது புத்தஜயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'மஹிந்தாகமனய' திரைப்படத்தின் பரிசளிப்பு நிகழ்வும் நூல் வெளியீடும் இன்று புதன்கிழமை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,  தபால் சேவை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, களனி பல்கலைக்கழக வேந்தர் வண. பெல்லன்வில விமலரதன தேரர், வண. எல்லாவல மேதானந்த தேரர்  உட்பட பௌத்த மதகுருமார்கள்  , கிறிஸ்தவ மதகுருமார்கள் , தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க, இத்திரைப்படத்தின் இயக்குநர் சனத் அபயசேகர, இத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள்  கலந்துக்கொண்டனர்.

அங்கு உரையாற்றிய தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க...

''மிக நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கையில் சிறந்ததொரு சிங்கள திரைப்படத்தை பார்த்த திருப்தியை இந்த மஹிந்தாகமனய திரைப்படம் தந்துள்ளது. தற்போது வெளிவரும் திரைப்படங்கள் சமூகத்திற்கு எந்த செய்தியையும் சொல்வதில்லை. இந்நிலையில் திரைப்பட கூட்டுத்தாபனத்தை பொறுப்பேற்கும் போது திரைப்படத்துறையை எவ்வாறு வளர்ச்சியைநோக்கிக் கொண்டு செல்ல போகின்றேன் என்ற பயம் எனக்குள் எழுந்தது. இந்த வயதான காலத்தில் என்னால் இதனை சிறந்த துறையாக முன்னேற்ற முடியுமா என்ற சந்தேகம் தோன்றியது. ஆனால் இவ்வாறான திரைப்படங்களை பார்த்தவுடன் எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது.

உண்மையில் இத்திரைப்படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறந்த முறையில் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் மன்னனாக பாத்திரமேற்றவர் மன்னாகவே வாழந்து இருக்கின்றார்.

நடிப்புத்துறையிலிருந்து வேறு எந்தத்துறைக்குச் சென்றாலும் திரைப்படத்துறையை மட்டும் கைவிட்டுவிட வேண்டாம். ஏனெனில் மற்ற துறைகளில் நிலைப்பதற்கான வாய்ப்புகள் கை நழுவும்போது மீண்டும் இந்தத் துறையிலே வந்து விழவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். எனவே இந்தத் துறையை மறந்து விடவேண்டாமென அவருக்கு நான் இந்நேரத்தில் கூறிக்கொள்கின்றேன்.

மேலும் இலங்கையின் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை இப்போது நாங்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம். இலங்கையில் இப்போது நவீன முறையில் பல திரையரங்குகள் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கொட்டாஞ்சேனையில் மிக பிரமாண்டான திரையரங்கு உருவாக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இலங்கையில் தொழில்நுட்ப வசதிகள் குறைவாக காணப்படுகின்றமையால் இந்தியாவிற்குச் சென்றே திரைப்படங்களை எடிடிங் செய்யவேண்டிய நிலைமைக் காணப்படுகின்றது. இதனால் அதிகளவு செலவுகள் ஏற்படுகின்றன. இவற்றை குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் இங்கு நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட ஸ்டூடியோ ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.." என்று குறிப்பிட்டார்.

இதன்போது, இத்திரைப்படத்தின் இயக்குநர் சனத் அபயசேகரவிற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட புத்தர் சிலையொன்றை வண. எல்லாவெல மேதானந்த தேரர் கையளித்தார். (Pix By:- Kithsri De Mel)


You May Also Like

  Comments - 0

  • niroos Thursday, 23 June 2011 09:16 PM

    everyone should watch this film

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X