2025 மே 21, புதன்கிழமை

நான் என்ன பேயா?: திரிஷா ஆதங்கம்

A.P.Mathan   / 2011 ஜூன் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'மங்காத்தா' படத்தில் அஜித் தன்தை முத்தமிட மறுத்துவிட்டதாக வெளிவந்த செய்தியால் கடுப்பாகி 'நான் என்ன பேயா? என்னை எதற்காக அஜித் முத்தமிட பயப்பட வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை திரிஷா.

பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் அஜித்தின் நடிப்பில் உருவாகிவரும் 'மங்காத்தா' திரைப்படத்தில் அஜித்தை திரிஷா முத்தமிடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டதாம். ஆனால் திரிஷாவை முத்தமிட அஜித் விரும்பாததால் அந்த காட்சி நீக்கப்பட்டதாக செய்திகள் அண்மையில் அடிபட்டன. இந்த செய்தி பற்றி திரிஷாவிடம் கேட்டபோதே மேற்படி பதிலை கடுப்பாகி தெரிவித்துள்ளார்.

''மங்காத்தா படத்திற்காக அப்படியொரு சம்பவம் நடைபெறவேயில்லை. அப்படியே இருந்திருந்தாலும் என்னை முத்தமிட அஜித் ஏன் பயப்படவேண்டும்? நான் என்ன பேயா? ஏதாவதொரு வதந்தியை பரப்புவதே இவர்களின் வேலையாய் போய்விட்டது. மங்காத்தா திரைப்படம் எனக்கும் அஜித்துக்கும் நல்லபெயரை எடுத்துத்தரும் என்ற ஐயத்தினால் சிலர் பரப்புகின்ற வதந்திதான் இது...'' என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் திரிஷா.

தமிழில் இப்போதைக்கு 'மங்காத்தா' மட்டும்தான் திரிஷாவிற்கு இருக்கிறது. வேறெந்த படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இருந்தபோதிலும் கௌதம் மேனனின் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது. அப்படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த திரிஷா மீண்டும் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளாராம்.

ஹிந்தியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் உருவாகியபோது அதில் திரிஷாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்பதால் கௌதமுடன் திரிஷா மனஸ்தாபப்பட்டதாக செய்திகள் பரவியிருந்த நிலையிலேயே 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தில் கௌதம் மேனனின் இயக்கத்தில் திரிஷா நடிக்கவிருக்கிறார்.


 


You May Also Like

  Comments - 0

  • appu Monday, 27 June 2011 01:02 AM

    த்ரிஷாவின் படங்களை பார்க்கும் போது Tatoo Artist ஆகணும்னு ஆசையாய் இருக்கு....

    Reply : 0       0

    sapee Tuesday, 28 June 2011 04:41 AM

    கூத்தாடிகள் kiss பண்ணினாலும் பன்னாட்டிலும் பந்தாதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X