2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜெனிலியாவுக்கு கைகூடிய காதல்...

Menaka Mookandi   / 2011 ஜூலை 05 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தனக்கென தனியிடத்தையே தக்கவைத்துக்கொண்டுள்ள ஜெனிலியா, தனது காதலன் ரிதேஷ் தேஷ்முக்கை வெகு விரைவில் திருமணம் செய்யப் போகிறார்.

போய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். இதேவேளை, தெலுங்கிலும் இந்தியிலும் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

இந்தி நடிகரும் முன்னாள் மராட்டிய முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமாகிய ரிதேஷ் தேஷ்முக்கும் ஜெனிலியாவும் சில வருடங்களுக்கு முன்னர் இந்தி திரைப்படமொன்றில் ஜோடி சேர்ந்தார்கள். இதன்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருப்பினும் இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.

குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். மிகவும் இரகசியமான முறையில் இவர்களின் காதல் கச்சேரி நடந்தேறியுள்ளது.

இதையறிந்த இருவரதும் பெற்றோர், எதிர்ப்பை கைவிட்டு அவர்களைச் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவு இத்தனை நாட்களும் இரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பெற்றோர் அனுமதியுடன் பகிரங்கமாக ஜோடியாக சுற்றுகின்றனராம்.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஐஃபா விருது விழாவில் ரிதேஷும் ஜெனிலியாவும் ஜோடியாகவே சென்று கலந்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் தனது கைவசமுள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கவுள்ள ஜெனிலியா, காதல் கைகூடியதில் தலைகால் புரியாது சந்தோஷத்தில் மிதக்கிறாராம்.


You May Also Like

  Comments - 0

  • suresh Wednesday, 06 July 2011 10:26 PM

    ஆல் தி பெஸ்ட். சுரேஷ், ஸ்ரீலங்கா

    Reply : 0       0

    siraj saudi arabia Tuesday, 12 July 2011 04:27 PM

    வாழ்த்துக்கள் ..............

    Reply : 0       0

    MJF.Fahira&Farija&Amna Monday, 15 August 2011 08:45 PM

    நினைத்த வாழ்க்கை கைகூட வாழ்த்துக்கள்.............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X