2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கார்த்தி – ரஞ்சனி திருமண வரவேற்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 08 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகருமான கார்த்தியின் திருமண வரவேற்பு சென்னையில் நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. நடிகர் - நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் தங்களது குடும்பத்தாருடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்திக்கும், ஈரோடு அருகில் உள்ள கிலாம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் கடந்த 3ஆம் திகதி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதிய மணத் தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை, சென்னை ஹோட்டலில் நடைபெற்றது. மணமக்களை முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு, செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. மலைச்சாமி, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பத்திரிகையாளர் சோ, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.

அத்துடன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எல்.சுரேஷ், ராம்குமார், கலைஞானம், முக்தா சீனிவாசன், ஏவி.எம்.முருகன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கோவை மணி, கே.பாலு, திருப்பூர் மணி, ஏ.எல்.அழகப்பன், கோவை தம்பி, இயக்குனர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வசந்த், விக்ரமன், எழில், சமுத்திரகனி, பேரரசு, ஹரி, கரு.பழனியப்பன், சுரேஷ்மேனன், பார்த்திபன், தங்கர்பச்சான், பிரியா, ஏ.ஆர்.முருகதாஸ், ராதா மோகன் ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.

மேலும், நடிகர்கள் விஜய், சத்யராஜ், சிபிராஜ், ஆனந்தராஜ், சத்யன், பிரசன்னா, பரத், ஜெய், அனுமோகன், பிரகாஷ்ராஜ், மோகன், எஸ்.வி.சேகர், விவேக், ராஜேஷ், வை.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், செந்தில், தியாகு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

நடிகைகளான மீனா, சுஹாசினி, மனோரமா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நக்மா, லட்சுமி, ஷோபனா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், சீர்காழி சிவசிதம்பரம், பாடகி பி.சுசிலா, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் செட்டியார், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, கணேஷ், டான்ஸ்மாஸ்டர் ரகுராம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் நடிகர் சிவக்குமார், அவருடைய மனைவி லட்சுமி, மகன் சூர்யா, மகள் பிருந்தா, மருமகள் ஜோதிகா ஆகியோர் வரவேற்று உபசரித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • siraj maligaikadu Saturday, 09 July 2011 03:59 PM

    வாழ்க வளமுடன் நண்பர் நடிகர் கார்த்தி.

    Reply : 0       0

    nnassm Saturday, 09 July 2011 07:39 PM

    ஒரு கலைக் குடும்பத்தின் திருமணம் வாழ்க வளமுடன் நண்பா.

    Reply : 0       0

    Baskar &Shanthi family Sunday, 10 July 2011 02:47 PM

    வி விஷ் யு ஆல் தி பெஸ்ட்....

    Reply : 0       0

    S.Shanmugananthan Sunday, 10 July 2011 09:11 PM

    வாழ்க பல்லாண்டு நலமுடன்

    Reply : 0       0

    MJF.Fahira&Farija Saturday, 13 August 2011 05:11 AM

    வாழ்க்கை தோணியிலே ரஞ்சனி எனும் துடுப்பை இணைத்து சிறப்பாக வாழ இந்த அபிமான ரசிகைகளின் இனிய வாழ்த்துக்கள் கோடி..........................

    Reply : 0       0

    Habeeb Saturday, 20 August 2011 08:57 PM

    வாழ்த்துக்கள் உங்கள் புதிய குடும்பத்திற்கு.

    Reply : 0       0

    abinaya Tuesday, 29 November 2011 12:48 AM

    wish u all the best for your marriage life

    Reply : 0       0

    dhilip Tuesday, 27 December 2011 06:30 PM

    hai karthik best wishes for u.

    Reply : 0       0

    shiny Wednesday, 21 November 2012 10:33 AM

    கார்திக்கு எனது திருமன விஷ்ச்

    Reply : 0       0

    shiny Wednesday, 21 November 2012 10:34 AM

    ஆல் த பெஸ்ட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X