Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 20 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
போனி கபூருடனான திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார் நடிகை ஸ்ரீதேவி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் 'இங்கிலீஷ் விங்கிலீஸ்' என்பதாகும்.
'சீனிகம்' மற்றும் 'பா' போன்ற திரைப்படங்களில் புகழ்பெற்ற இயக்குநர் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடுத்தர குடும்பத் தலைவியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.
அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அவர் பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமெரிக்கா சென்று மொழி பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் அங்குள்ளவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.
இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நாளடைவில் ஆங்கிலத்தை முறைப்படி கற்றுக்கொள்கிறார். பின்னர் ஆங்கிலம் பேசி அமெரிக்கர்களையே ஆச்சரியத்தில் அசத்துகிறார் என்று கதை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் அமெரிக்க ஆங்கிலத்தை முறைப்படியாக கற்று வருகிறாராம் ஸ்ரீதேவி. திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தப் படத்தில் கதாநாயகியாகவே அவர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
IBNU ABOO Saturday, 23 July 2011 03:58 AM
மேகப் மென்கள் இருக்குமட்டும் எத்தனை ஆண்டுகள் திருமணமாகி கழிந்தாலும் கதாநாயகியாக வருவது ஒன்றும் ஆச்சரியமில்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago