2025 மே 21, புதன்கிழமை

படுக்கையறை காட்சியில் ரீமா...

Menaka Mookandi   / 2011 ஜூலை 21 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2004ஆம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'இடி ஸ்ரீகந்தா' என்ற திரைப்படம் 'இளவரசி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இதில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரீமா சென்.  ரீமா சென் அந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தது மாத்திரம் தான், தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகைளில் இன்று பிரதானமாக இடம்பெற்றிருப்பது படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான்.

என்ன இது...? என்ன படம் இது? என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இந்த விளம்பரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக இளவரசி திரைப்படக்குழுவினர் மகிழ்ச்சியின் ஆழ்ந்துள்ளனர்.  ஆனால் இவை தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. ரீமா சென் முன்பு நடித்த 'இடி ஸ்ரீகந்தா' என்ற வங்க மொழிப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி என்ற பிறகு படுக்கையறைக் காட்சி இல்லாமலா...? அதனால் தாராளமாகக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் ரீமா. இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, 'இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கதாபாத்திரம். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ நான் முழுநீள செக்ஸ் படத்தில் நடித்தது போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது செக்ஸ் படமல்ல. நல்ல கலைப் படம்' என பதிலளித்துள்ளார் ரீமா.


You May Also Like

  Comments - 0

  • ravichandran Monday, 25 July 2011 10:54 PM

    நடித்தால் என்ன? பணம் தருகிறார்கள்.
    நீங்கள் தவறாக நினைத்துவிடாதீர்கள். சினிமாவில் தானே காண்பிக்க முடியும்.

    Reply : 0       0

    saji Friday, 29 July 2011 10:45 PM

    செம கட்ட ரீமா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X