2025 மே 21, புதன்கிழமை

ஆடையைக் குறைக்காமல் ரசிகர்களை என்னால் கவர முடியும்: அசின்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகைகளில் தற்போது முக்கிய இடம் வகிப்பவர் நடிகை அசின். வதந்திகள், பரபரப்புகளை ஏற்படுத்தியே ஒருவரால் சினிமா உலகில் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புதிய வித்தையை அறிமுகம் செய்த பெருமையும் அவருக்கே உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

கஜினி திரைப்படத்துக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாமல் இருந்த அசினுக்கு பெரிதாகக் கைகொடுத்தது சல்மான்கானின் அண்மைய வெளியீடான 'ரெடி'. அதன் பிறகு அபிஷேக், அஜய் தேவ்கன் படங்களிலும் நடிக்கிறாராம் அசின்.

இதுகுறித்து அவர் அண்மையில் கருத்து தெரிவிக்கையில், 'ரெடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆடையைக் குறைக்காமலேயே என்னால் ரசிகர்களைக் கவர முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்தப் படம்.

என்னைப்பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவுவதாகக் கூறுகிறார்கள். இதை நானே உருவாக்குவதாகவும் சிலர் எழுதியுள்ளனர். இந்தி திரையுலகில் இதெல்லாம் சகஜம் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.

இன்னொரு முக்கியமான விடயம், நான் படங்களில் தலையிட்டு கதாநாயகனை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அந்த நிலையிலும் இல்லை.

இதேவேளை, ஷாருக்கானுடன் நடிப்பதாக நான் சொல்லவில்லை. அவரது '2 ஸ்டேட்ஸ்' திரைப்படம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. வேறு இரண்டு படங்களுக்கான வேலைகளில் ஷாருக் பிசியாக இருக்கிறார். இப்போதைக்கு அபிஷேக்பச்சனுடனும், அஜய் தேவ்கனுடனும் நடிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Hussain Thursday, 04 August 2011 12:46 PM

    அசின் இல்ல நீ ஒரு பிசின்

    Reply : 0       0

    ashvin Wednesday, 17 August 2011 09:33 PM

    கண்ட கண்ட இடத்த காட்டுறவங்க தானே. இதுக்குள்ள ஆடைய வேற குறைக்க மட்டிங்க எண்டு வெளில வேற சொல்றாங்க.

    Reply : 0       0

    raja Tuesday, 30 August 2011 11:20 PM

    அப்படியே போங்க ரொம்ப நன்றி தமிழுக்கு .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X