2025 மே 21, புதன்கிழமை

திருமண விடயத்தில் மோதிக்கொள்ளும் த்ரிஷா – அம்மா

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காதல் திருமணம்தான் செய்வேன் என்று நீண்ட நாட்களாகக் கூறிவந்த நடிகை த்ரிஷா, இப்போது தனது மனதுக்குப் பிடித்தமான ஒருவரை தெரிவு செய்து வைத்துள்ளார் என அண்மையில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், த்ரிஷாவுக்கு வரன் பார்த்திருப்பதாகவும், மணமகன் சென்னை தொழிலதிபர் என்றும் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு செய்தியை கசியவிட்டிருந்தார்.

இதனால் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அம்மா - மகள் என்றில்லாமல், தோழிகளைப் போல பார்ட்டி, விழா என அமர்க்களப்படுத்துபவர்கள் நடிகை த்ரிஷாவும் அவர் அம்மா உமாவும். ஆனால் இப்போது இருவரும் கடும் பிணக்கில் உள்ளனராம்.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று நேற்று பரபரப்பாக செய்தி வெளியான நிலையில், அன்று மாலையே அதை மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டார் த்ரிஷா. த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்த விடயத்தை ஊடகங்களுக்கு தகவலாகச் சொன்னவர் த்ரிஷாவின் அம்மா உமா. ஆனால் இதனை அடியோடு மறுத்து வருகிறார் த்ரிஷா.

இதற்குக் காரணம் மாப்பிள்ளை யார் என்பதில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல்தானாம். இந்த விடயத்தில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • nakeeb adam Tuesday, 09 August 2011 05:09 PM

    யார் கட்டினால் என்ன , எல்லாம் ஒரு மாதிரிய ஆரின சாம்பார்தான்.

    Reply : 0       0

    Pradeep Reddy Friday, 12 August 2011 08:33 PM

    அலோ மாப்பிள்ளை நான் தான்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X