2025 மே 21, புதன்கிழமை

புதிய சிக்கலில் சிம்பு...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் மீது திரைப்பட விநியோகஸ்தரான எஸ்.பி.ராமமூர்த்தி சென்னை மாநகர பொலிஸில் கொலை மிரட்டல் முறைப்பாடு செய்துள்ளார். அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1999ஆம் ஆண்டு 'மோனிசா என் மோனாலிசா' திரைப்படத்துக்கான 'குறைந்த பட்ச உறுதி' அடிப்படையில், டி.ராஜேந்தர் எனக்கு ரூ.31 இலட்சம் தரவேண்டியுள்ளது. நான் அந்தப் பணத்தைக் கேட்டபோது டி.ராஜேந்தர் அதனைத் தர மறுத்தார். இது தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' திரைப்படம், சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிட முயற்சி செய்யப்பட்டது.

கடன் பாக்கிக்காக அந்த படத்திற்கு, உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற முயற்சித்தேன். அப்போது ராஜேந்தர் பணத்தை தர ஒப்புக்கொண்டதால், அம்முயற்சியை கைவிட்டேன். அதன்பின், சிம்பு நடித்த திரைப்படங்களான 'விண்ணைத் தாண்டி வருவாயா' மற்றும் 'வானம்' ஆகியவற்றை சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயரில் வெளியிடாமல் மற்ற பேனரில் வெளியிட்டனர். 'வானம்' படம் வெளியான போது ராஜேந்தரை அவரது வீட்டுக்கு சென்று பார்த்தேன்.

அப்போது அவரும் அவரது மகன் சிலம்பரசனும் என்னை மிரட்டி, விரட்டி அடித்தனர். மேலும், 'ஆட்சியே எனக்கு சாதகமாக உள்ளது. ஊடகமும் என் கையில் உள்ளது. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, உன்னை கொன்று விடுவேன் ஓடி விடு' என ராஜேந்தர் அச்சுறுத்தினார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்கனவே தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், கடந்த 3ஆம் திகதி ராஜேந்தர் என்னை சமரசம் பேச, அவரது வீட்டுக்கு அழைத்ததன் பேரில் அவரை சந்திக்கச் சென்றேன்.

அப்போது அவரது மகன் சிலம்பரசன், என்னை கொன்று விடுவதாக மிரட்டி, விரட்டினார். மேலும், 'வழக்கு தானே போட்டீங்க, அங்கேயே போய் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்' என்றும்; கூறினார். 'எந்த ஆட்சி வந்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறி எனது கன்னத்தில் அறைந்து வெளியே தள்ளினார். இவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பணத்தை மீட்டுத் தருவதுடன், எனக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும' என்று அவர் அந்த அதில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ameer Saturday, 06 August 2011 05:30 PM

    உண்மையான நடிகர்கள் இவர்கள்தான்.

    Reply : 0       0

    surendran Saturday, 06 August 2011 08:23 PM

    தமிழன் என வாழும் பெரியவர்கள் இவர்கள் ............கேட்டால் சொல்வார்கள் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம்.

    Reply : 0       0

    shan Saturday, 06 August 2011 10:33 PM

    ஒரு பக்க செவ்வியால் தீர்ப்பு சொல்லமுடியாது மறுபக்கம் என்ன என்றும் பார்க்கணும்??

    Reply : 0       0

    ris Sunday, 07 August 2011 03:09 PM

    இவன் சிம்பு இல்ல... உண்மையிலேயே இவன் ஒரு வம்பு... வம்பு... வம்பு......

    Reply : 0       0

    saieth Tuesday, 09 August 2011 08:46 AM

    பாஸ் நீங்கள்தான் உண்மையான சிங்கங்கள் ........

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 10 August 2011 02:31 AM

    திரையில் கதாநாயகன் நிஜத்தில் வில்லன். இதுதான் ஐயா சினிமா கோலம். இதை புரியாம சினிமாகாரங்க திரையில் உள்ள கதைப் பிரகாரம் போடும் வேசத்தை பார்த்து நிஜம் என நம்பி சீரழியும் சினிமா பைத்தியங்களை பார்த்தால் பாவம். இந்த பயிதியன்களை நம்பிதானே ஆட்சியை பிடிப்பதற்கு திரை தீரர்கள் கனவு காண்கிறார்கள். அந்த வகையில் எங்கள் நாடு மேல்.

    Reply : 0       0

    vithu Wednesday, 10 August 2011 06:21 PM

    இவர்களால் தான் சினிமா துறைக்கு கெட்ட பேர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X