2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெயரை மாற்றுகிறார் ரஜினி...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராசி பலன் மற்றும் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தான் சுகவீனமுற்றதை அடுத்து வீட்டின் வாஸ்தினை மாற்றியமைத்ததன் பின்னரே வைத்தியசாலையிலிருந்து மீண்டும் வீடு திரும்பிய அவர் தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் பெயரையும் ராசிக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளாராம்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ராணர. ராணோஜி ராவ் என்ற தனது தந்தையின் நினைவாக இந்தத் திரைப்படத்துக்கு ராணா என்று பெயர் சூட்டப்பட்டது.
 
இரண்டு எழுத்துக்களில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பெயர், ரஜினியின் ராசிக்கு பொருத்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தனது தந்தையில் பெயராச்சே என்று அது அப்படியே இருக்கட்டும் என்று ஆரம்பத்தில் ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த திரைப்படத்துக்கான பூஜையும் போடப்பட்டது. ஆனால் அன்றிலிருந்தே ரஜினிக்கு பிரச்சினை தொடங்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் துன்பங்களை அனுபவித்தார் ரஜினி.

இந்நிலையில், பாபா என்ற இரட்டை எழுத்துப் பெயர் கொண்ட திரைப்படம் சந்தித்த பிரச்சினைகளையும் இத்தோடு இணைத்து ராணாவும், இரண்டெழுத்தில் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினை எதற்கு என்று பலரும் ரஜினிக்கு மீண்டும் ஆலோசனை கூறியுள்ளார்களாம்.

மேலும், படையப்பா போன்று ஐந்தெழுத்து அல்லது சந்திரமுகி போன்று 6 எழுத்துக்களில் நல்ல தமிழ்ப் பெயராக வைத்து விடலாம் என்ற யோசனையும் ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இதனையடுத்தே ராணாவின் பெயர் மாற்றத்துக்கான அனுமதியினை ரஜினி வழங்கியுள்ளாராம். இருப்பினும் படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்குமாறும் பெயர் மாற்றத்தைப் பற்றி பின்னர் தெரிவிப்போம் என்று ரஜினி தரப்பிலிருந்து ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • jaliyuath Monday, 08 August 2011 07:55 AM

    நீங்க பேர் மாற்றினால் என்ன ? மாற்றாவிட்டால் என்ன ? எப்படியும் மடமை மிக்க ரசிகர்கள் இருக்கும் வரை ஏமாற்ற முடியும் . இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லவேண்டும்.

    Reply : 0       0

    naren Tuesday, 09 August 2011 12:54 AM

    சுகம் இல்லாமல் போவது இயற்கை. இதில் என்ன பேர் மாற்றம் வேண்டி கிடக்கு.

    Reply : 0       0

    zarook Tuesday, 09 August 2011 10:45 AM

    பெயர் மற்றசொல்லும் மனிதர் அவரின் நோயை ஏன் பெயர் மாற்றி சுகம் பெற முடியவில்லை. இதுவெல்லாம் ஏமாற்று வித்தை.

    Reply : 0       0

    hamza Tuesday, 09 August 2011 05:02 PM

    ராணா இது உமக்கு வேணா...

    Reply : 0       0

    alneenga Tuesday, 09 August 2011 09:35 PM

    இது ஒரு பைத்தியகார வேலை ஓகே

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 10 August 2011 02:14 AM

    ithu எல்லாம் மூட நம்பிக்கை. இன்பமும் thunpamum kalanthathuthaan vaalkai .ulakil ulla ellorum vasthu peyar maatram enru poanaal oru thollayum varaathe .kadavulai nampukiraaraa illai veru visayankalai nampukiraaraa.

    Reply : 0       0

    nafisath Thursday, 11 August 2011 04:02 AM

    பெயர் ரஜினி என்று இல்ல ராஜா என்று வச்சாலும் நேரம் வந்தால் வாழ்வும் வரும் சாவும் வரும்

    Reply : 0       0

    faz Sunday, 14 August 2011 03:54 AM

    மடமையின் உச்ச கட்டம் இது.

    Reply : 0       0

    kugan Monday, 15 August 2011 04:26 PM

    நீங்கள் எப்படி பெயர் வைத்தாலும் தலைவர் படம் நாள் ஓடும், தலைவர்னா சும்மாவா? முழு இந்தியாவே போற்றும் ஒரே நடிகர் அவராச்சே..

    Reply : 0       0

    Mayu Thursday, 18 August 2011 02:43 AM

    அடி பட்டவனுக்கு தான் தெரியும் வேதனையும் வலியும்..
    வாழ்கையில கஷ்ட பட்டு முன்னுக்கு வந்தவர் சூப்பர் ஸ்டார்..
    அவர் ஒரு முடிவு எடுத்த அது சரியாய் தான் இருக்கும்.

    Reply : 0       0

    kiyas Sunday, 21 August 2011 05:20 AM

    கண்டிப்பாக ஒரே ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் ...

    Reply : 0       0

    கல்முனைவாசி Tuesday, 23 August 2011 05:28 AM

    ஐயோ... ஐயோ... அறியாமையின் உசச்க்கட்டம்

    Reply : 0       0

    justice Sunday, 04 September 2011 10:55 PM

    மூட நம்பிக்கையின் முன்னோடி தமிழ்நாடு உருபட்டாப்லத்தான் ...

    Reply : 0       0

    zahiramm Friday, 09 September 2011 02:46 AM

    raana peyar nallathane irukku.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X