Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு காலத்தில் பல இலட்சம் ரசிகர்களின் தூக்கம் கெடுத்த கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இப்போது திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ள நிலையில் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் மாமியார் வேடத்தில்.
நடிகை மீனா 1982ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 2009ஆம் ஆண்டுவரை பல மொழித் திரைப்படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு பெங்களுரைச் சேர்ந்த சொப்ட்வேர் என்ஜினியரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டனர். திருமணத்துக்கு பின் மீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். மீண்டும் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார்.
ஆனால் திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் மீனா. தெலுங்கில் பிரபல நடிகர் ராம்சரண் படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. மீனா நடிப்பதற்கு அவர் கணவரும் சம்மதம் சொல்லி விட்டாராம்.
சில வருடங்களுக்கு முன் இடம்பெற்ற திரைப்பட விழாவொன்றில் உரையாற்றிய ரஜினிகாந்த், 'நடிகை மீனா என் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஜோடியாக நடித்தார். யார் கண்டது, பின்னாளில் எனக்கு அம்மாவாகக் கூட அவர் நடிக்கலாம்,' என்று கூறியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் அவர் சொன்னது நிஜமாகிவிடும் போலிருக்கிறது...!
Riyas Saturday, 20 August 2011 08:16 PM
சினிமா என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்.எல்லாம் காசுக்கு கூத்தடிக்கும் குழுவாச்சே.
Reply : 0 0
vaseekaran Sunday, 16 October 2011 03:37 AM
மீனா எந்த கதாபத்திரத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிப்பால்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago