2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குஷியாகியுள்ளார் தப்ஸி...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஞ்சாபைச் சேர்ந்த அழகிய தேவதை தப்ஸி. 24 வயதான இவர், ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் ஜோடியாக அறிமுகமானார். தற்போது நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக 'வந்தான் வென்றான்' திரைப்படத்தில் நடிக்கின்றார். இதேவேளை, அவருக்கு பொலிவூட் திரைப்பட வாய்ப்புக்களும் வந்து சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதேவேளை, தப்ஸி தொடர்பான மற்றுமொரு சுவாரசியமான செயதியொன்றும் வெளியாகியுள்ளது. பொதுவாக நடிகைகள், தங்களது எடையைக் குறைத்துக் கொள்வதற்காக கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, யோகா என வியர்க்க விறுவிறுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நடிகை தப்ஸிக்கோ இந்த பிரச்சினையே இல்லையாம். தன்னுடைய உடல் எடையைக் குறைத்துக் கொள்வதற்காக இப்படியெல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை என்கிறார். அவரிடம் அப்படி என்னதான் ரகசியம் மறைந்திருக்கிறது என்று பார்க்கிறீர்களா? பெரிதாக ஒன்றும் இல்லை, பயணம் செய்தாலே தனது உடல் எடை தானாகக் குறைகிறது என்கிறார் தப்ஸி.

'வந்தான் வென்றான்' திரைப்படத்துக்கான தப்ஸி எப்பொழுதும் பயணம் செய்துகொண்டே இருக்கிறாராம். கேரளா, மும்பை, புதுச்சேரி, கோவா என்று பயணிக்கும் தப்ஸிக்கு எடை தானாக குறைகிறதாம். இதனால் அவர் குஷியாகியுள்ளார்.

'வந்தான் வென்றான் குழுவோடு பணி புரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் ஸ்லிம்மான தப்ஸியைப் பார்ப்பீர்கள்' என்கிறார் அவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X