Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ்ப்படம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை திஷா பாண்டே. 'தமிழ்ப்படம்' பெரிய வெற்றிப்படமாக அமைந்த போதிலும் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு அதன் பின்னர் நிறைய வாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறவேண்டும். அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது 'மயங்கினேன் தயங்கினேன்' திரைப்படத்தைத்தான்.
திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் திரைப்படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தத் திரைப்படத்தின் நாயகன் பெயர் நிதின் சத்யா. எஸ்.டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். தவிர தேஜாஸ்ரீயும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றாராம். போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.
டெக்ஸி ட்ரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஒபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago