2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொடர்ந்தும் முன்னணியில் இருக்க விரும்பும் அசின்...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திரைத் துறையைச் சேர்ந்தவர்களிடம், எதற்காக நடிக்க வந்தீர்கள் என்ற கேள்வியை முன்வைப்போமானால் அதற்கு பல்வேறு பதில்களை அவர்கள் அடுக்கிக்கொண்டு போவார்கள். அவர்களின் பட்டியலில் பல காரணங்கள் காணப்படினும் அவற்றின் உள்நோக்கம் பணம் சம்பாதிப்பதாகவே காணப்படும்.

இருப்பினும் கைவசம் பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து வசதிகளும் இருந்தும், கலையின் மீது ஏற்பட்டுள்ள தாகத்தைத் தீர்க்கவே நடிக்க வந்தேன். அந்த நடிப்புத் துறையில் நானே முன்னணியில் இருக்க வேண்டும் என்கிறார் நடிகை அசின்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை அசின், எம்.குமரன் திரைப்படத்தின் மூலம் தமிழத் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழித் திரைப்படங்களிவுலும் பிஸியாகிவிட்டார்.

இந்தியில், கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசின், தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். இந்தித் திரையுலகில், எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் தமிழ்;, தெலுங்கில் வரும் வாய்ப்புகளையும் புறம்தள்ளி வருகிறார்.

இருப்பினும், இந்தி கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம். இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

இதேவேளை, நடிகை அசினுக்கு கேரளாவில் சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளனவாம். அவற்றை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளாராம் அசின். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத் தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம். எப்படியோ...! அவரது கலைத்தாகம் தீர்ந்தால் சரிதான்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X