Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிரமுகர் யார்? என்ற கேள்வியை முன்வைத்தால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? மறுபேச்சுக்கே இடமில்லை, அந்த பதில் 'மிஸ்டர் பீன்' என்றே இருக்கும். ஆனால் எங்கள் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சங்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகியுள்ள மிஸ்டர் பீன் தற்போது அவர்களுக்கு துக்கத்தைக் கொடுக்கப் போகிறாராம். ஆம், அவர் மிஸ்டர் பீன் என்ற தொடரில் இருந்து ஓய்வு பெறப் போகிறாராம்.
மேற்படி நகைச்சுவைத் தொடரில் மிஸ்டர் பீனாக வந்து உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவர், பிரபல ஹொலிவூட் நடிகர் ரோவன் ஆட்கின்சன் (வயது 56).
இந்த மிஸ்டர் பீன் தொடரை உலகம் முழுவதிலும் சுமார் 18 மில்லியன் பேர் தினந்தோரும் கண்டு ரசிக்கின்றார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997ஆம் ஆண்டு 'பீன் தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி' மற்றும் 2007ஆம் ஆண்டு 'மிஸ்டர் பீன்ஸ் ஹொலிடே' என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.
அத்துடன், மிஸ்டர் பீன் என்ற தொலைக்காட்சித் தொடர் ஒன்றும் வெளியாகிக்கொண்டுள்ளது. இத்தனை பிரபலமான தொடரில் இனி மிஸ்டர் பீனாக நடிக்கப்போவதில்லை என்று ரோவன் ஆட்கின்சன் தெரிவித்துள்ளார்.
'நான் இனிமேல் மிஸ்டர் பீனாக நடிக்க மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. மிஸ்டர் பீன் கதாபாத்திரம் வயதாகாமல் அப்படியே இருப்பதாகும். அதனால் இனியும் நான் மிஸ்டர் பீனாக நடிப்பது சரியல்ல. மிஸ்டர் பீன் என்பது எப்பொழுதும் இளமையாக இருக்கும் கதாபாத்திரமாகும். அப்படியே நானும் பார்த்துள்ளேன். எனவே, வயதாகும் நான் இதில் நடிப்பதில் உகந்தது அல்ல' என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
amn Thursday, 08 September 2011 03:15 AM
realy we are very sad.
Reply : 0 0
IBNU ABOO Saturday, 10 September 2011 04:07 AM
எங்கள் தமிழ் சினிமா வில் ஹாஸ்ய நடிகர்கள் வயதாவதற்குள் ஒன்று மரணித்து விடுவார்கள் அல்லது வேறு நகைச்சுவை நடிகர் வந்து இவரை முகவரி இல்லாமலாக்கி விடுவார். இவர்கள் ரசிகர்களை சிரிக்கவைக்க ஓவராக பேசியே நேரத்தை தின்பார்கள். ஆனால் மிஸ்டர் பீன் எவ்வளவு சிம்பிளாக வாய் திறக்காமலே நம்மை வயிறு புண்ணாக சிரிக்க வைக்கிறார், இது ஹாஸ்ய கலை தொழில் நுட்பம்.
Reply : 0 0
hamza Saturday, 10 September 2011 05:04 PM
சரியாய் சொன்னிங்க aboo.
Reply : 0 0
faslan Sunday, 11 September 2011 07:57 PM
எங்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர் மிஸ்டர் பீன் தான். அவர் ஓய்வு பெற்றால் நாங்களும் ஜோக் பார்ப்பதில் இருந்து நின்று விட வேண்டும்.
Reply : 0 0
Maheswaran Thilipan Monday, 12 September 2011 03:54 PM
ஹாய் இதுவும் ஜோக் thane.
Reply : 0 0
iqbal Tuesday, 15 November 2011 06:11 AM
mr.been sir ...i love u
Reply : 0 0
gaffoor Wednesday, 16 November 2011 07:03 PM
இவர் ஒரு அமைதியான நகைச்சுவை நடிகர்.
Reply : 0 0
wazeer latif Saturday, 26 November 2011 09:25 PM
நகைச்சுவை நடிகர் ஒரு நாளும் சிரிக்க கூடாது, அப்போதுதான் மமற்றவர்கள் சிரிப்பார்கள். அதில் முதன்மையானவர் மிஸ்டர் பீன்.
வாழ்க வளர்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago