Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் மிகவும் எளிமையாக நடித்து ரசிகர்களின் மனதில் நிலைகொண்டுள்ள பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி தனது 65ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.
இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. தனித்துவமிக்க இவரது குரலை மிமிக்ரி செய்து பேசி புகழ்பெறும் கலைஞர்கள் நிறைய இருக்கிறார்கள்.
16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார். நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் காந்திமதி என பெயரெடுத்தவர். கரகாட்டக்காரன் படத்திலும் இவரது கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சற்று குணமடைந்த காந்திமதி, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இருப்பினும் தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
நடிகை காந்திமதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை வடபழனியில் வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார். காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
IBNU ABOO Wednesday, 14 September 2011 02:06 AM
நீங்கள் இந்தச்செய்தியை வெளியிட்டு பின் இதற்கொரு ஓய்வு கொடுத்து மீண்டும் புதிதாக வெளியிட்டதன் அர்த்தம் புரியவில்லை.
Reply : 0 0
xlntgson Friday, 16 September 2011 10:06 PM
எனது கருத்தில் காந்திமதியின் வசனம் ஒன்றை திரித்து எழுதி இருந்தேன், நகைச்சுவையாக இல்லை போலும்!
"ஆத்தா கோழி வளர்த்தா... ஆடு வளர்த்தா... நாய் வளர்த்தா... மாடு வளர்க்கலையே, என்னத்தானே வளர்த்தா... - சப்பாணி"
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025