Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகர் எவருமில்லை. திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் மிகப்பெரியது.
இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துகொண்டுள்ளார் இந்தி நடிகர் ஷாருக்கான். ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில், 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஆனால் இந்தப்படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விடயம்.
இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு எவரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து ஷாருக்கானுக்காக நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!
ஷாரூக்கானின் 'ரா வன்' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தக் காட்சியில் அவர் நடிப்பாரா? இல்லையா? என பலத்த சந்தேகம் நீடித்தது. ஆனால் கடைசியில், அந்த சந்தேகத்தையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப்போக வைத்துவிட்டது. இதுகுறித்து தனது டுவிட்டரில் ரஜினியைப் புகழ்ந்துத் தள்ளியள்ளார் ஷாருக்கான். 'மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது ரஜினி சேர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்'
'சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சேரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினி சேர் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வோவ்!
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... அவர் இந்தப் படத்தில் நடிப்பார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சேர் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி,' என்று குறிப்பிட்டுள்ளார்.
majeed Saturday, 08 October 2011 03:46 AM
எல்லாமே நடிப்பு.
Reply : 0 0
thajmal Sunday, 25 December 2011 12:08 AM
நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க ................ தமிழ் இனத்தை அழிப்பது தமிழன்தான் ............... அதற்கு இந்த பதிவு ஒரு எடுத்து காட்டு .... ஒரு கன்னடதானை தமிழன் எவ்வளவு புகழ்ச்சியாக எழுதி இருக்கிறீர் ...... நன்றி நண்பா ........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago