Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா? என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில், தனக்கே விசேடத்துவமிக்க ஸ்டைல்களை தன் முன்னால் செய்து காட்டும் தனது இரு பேரன்களையும் பார்த்து பூரித்துப் போயுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தாத்தா ரஜினியும், அப்பா தனுஸும் நடிகர்கள். அம்மா இயக்குனர், சித்தி தயாரிப்பாளர், தந்தை வழி தாத்தா கஸ்தூரி ராஜா இயக்குனர், பெரியப்பா செல்வராகவன் இயக்குனர். இப்படி குடும்பமே கலைக்குடும்பமாக இருக்கும் போது பேரன்கள் இருவரும் அவரது ஸ்டைலை செய்து காட்டுவதென்பது ஆச்சரியமான விடயமல்ல என்பது அனைவரதும் கருத்து.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு மகன்களுக்கும், தொலைக்காட்சியில், தங்களது தாத்தா ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பது என்றால் அலாதிப் பிரியமாம். ரஜினியின் ஸ்டைலை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிறார்களாம். அவரிடமே சென்று அவர் ஸ்டைலை அவருக்கே செய்து காட்டி அசத்துகிறார்களாம்.
பிஞ்சுப் பிள்ளைகள் தன்னைப் போன்று ஸ்டைல் செய்வதைப் பார்த்து ரஜினி பூரித்துப் போயுள்ளாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் 'என் பேரன்மார்கள் என்னைப் போன்று ஸ்டைல் செய்து காட்டுகிறார்கள்' என்று சொல்லிச் சொல்லி பெருமிதப்படுகிறாராம் சூப்பர் ஸ்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago