2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விக்கிரமுடன் குத்தாட்டம் போடும் ஸ்ரேயா

Menaka Mookandi   / 2011 நவம்பர் 04 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுசீந்திரன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய திரைப்படம் ராஜபாட்டை. விக்ரம் - தீக்ஷா சேத் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரேயா மற்றும் ரீமா சென் இருவரும் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்களாம்.

தமிழ்த் திரையுலகில் பெரிதாக வாய்ப்புக்களின்றி உள்ள நடிகைகளின் பட்டியலில் ஸ்ரேயா மற்றும் ரீமா ஆகியோர் இடம்பிடித்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ராஜபாட்டை திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் ராஜபாட்டையின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அண்மையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட படங்களில் மங்காத்தா மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் அடுத்து வெளியிட்ட வெடி  திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

வெடிக்குப் பின்னர், சன் பிக்சர்ஸ் ராஜபாட்டையை வாங்கியுள்ள நிலையில், விஜய் நடிக்கும் நன்பண் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • GM Wednesday, 23 November 2011 10:29 PM

    மார்க்கெட் இல்லடி ... இப்பிடித்தான் குத்தாடுவாங்க !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X