2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிம்பு எனக்கு ஸ்பெஷல் என்கிறார் த்ரிஷா...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'அலை திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார்கள் சிம்புவும் த்ரி'க்வும். ஆந்த படம் வெற்றிபெறாத நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜோடி சேர்ந்த அனைவரது மனங்களையும் கவர்ந்த ஜோடியாகப் பெயரெடுத்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர். உண்மையில் த்ரிஷாவை விட சிம்பு வயதில் சிறியவர். இந்த வயது வித்தியாசமே இந்த ஜோடியின் சிறப்பு என சிலர் கூறுகின்றனர். எனவே இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு கருத்து தெரிவிக்கையில், 'த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விடயம். அப்படியொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 'சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஒன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரம்மாதமாக வர்க் அவுட் ஆகின்றது. அதனால் அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்' என்று த்ரிஷாவும் தன் பங்குக்கு பேட்டியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • GM Tuesday, 15 November 2011 07:52 PM

    கெமிஸ்ட்ரி ஓகே ... நோ பிசிக்ஸ்.

    Reply : 0       0

    Riyash Tuesday, 22 November 2011 06:39 PM

    தூஊ...... து.....தூஉ ...

    Reply : 0       0

    FATHIMA Monday, 05 December 2011 02:35 PM

    தீராத விளையாட்டு பிள்ளை .......

    Reply : 0       0

    Yakoob Sunday, 05 February 2012 02:01 AM

    த்ரிஷா ஜாக்கிரதை சிம்பு ................... பயல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X