Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்த நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த செய்தியால் கடுப்பாகியுள்ள அஞ்சலி 'எந்தவொரு நடிகரையும் நான் காதலிக்கவில்லை. என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் ஜெய்யுடன் இனி நடிக்கப் போவதும் இல்லை' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜெய்யும் அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். பொது இடங்களில் இருவரும் அடிக்கடி காணப்பட்டனர். ஏழாம் அறிவு திரைப்பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கள் வெளியாகின. அத்துடன், ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் ஏஜிஎஸ் திரைப்படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், அனைத்து கிசுக்கள் மற்றும் செய்திகளை மறுத்து ஒரு அறிக்கை ந்வியிட்டுள்ளார் அஞ்சலி. அதில், 'அங்காடித் தெரு மூலம் எனக்கொரு அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர் ரசிகைகளுக்கு எங்கேயும் எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு போராடித்தான் வேண்டும். ஐந்து ஆண்டுகள் போராடிய பிறகுதான் நல்ல நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.
இப்போதுதான் நல்ல நல்ல படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல், ஒரு நடிகருடன் காதல்;, திருமணம் என்றெல்லாம் பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் கிசுகிசுக்கப்படும் அந்த நடிகருடன் இணைந்து ஒரு படம்தான் நடித்துள்ளேன். அதன் பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். அப்படி வந்த வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டேன்.
நான் இன்னும் வளரவேண்டும். நல்ல நடிகை என பெயரெடுத்து விருதுகளை வாங்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன். எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதனை பகிரங்கமாக இப்போது அறிவிக்கிறேன். தயவு செய்து இனி அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள். நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.
GM Tuesday, 22 November 2011 02:53 AM
நம்பிவிட்டோம் .......... !!!!!!!!!!!!! .. மேலே சொல்லுங்கோ
Reply : 0 0
m jaleel kwt Tuesday, 22 November 2011 03:40 AM
அஹ்ஹா சூப்பர் வாழ்த்துக்கள்.....
Reply : 0 0
amilan Tuesday, 22 November 2011 11:20 AM
சூப்பரா இருக்குறீங்க. வளர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Hussain Sunday, 27 November 2011 02:15 PM
நீங்கள் நடிப்பில் சூப்பர் . உங்களை விரும்பாதவர் யார்? நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago