2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அதிகமாக தேடப்பட்ட மங்காத்தா...

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூகுள் இணைய வலைத்தளமானது ஆண்டுதோரும் துறைவாரியாக அதிகமாகத் தேடப்படும் 10 விடயங்கள் தொடர்பில் பட்டியலிட்டு வருகின்றது. அந்தவகையில் 2011ஆம் ஆண்டில் திரைத்துறையில் அதிகமாகத் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் அஜித்தின் 50ஆவது திரைப்படமான மங்காத்தா இடம்பெற்றிருக்கின்றது.

2010ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். அதேபோல, 2011 இறுதிக் காலாண்டில் அதிகம் தேடப்பட்ட படம் கோச்சடையான். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட படங்களில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது அஜீத் நடித்துள்ள மங்காத்தா.

இந்த திரைப்படங்களின் வரிசையில், 2011ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை சல்மான்கானின் போடிகாரட் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் ஷாரூக்கானின் ரா ஒன்னுக்கும், மூன்றாவது இடம் ஹரிபொட்டருக்கும், நான்காவது இடம் டெல்லி பெல்லிக்கும், ஐந்தாவது இடத்தை சிங்கம் (இந்தி) ஆகிய திரைப்படங்கள் தக்கவைத்துள்ளன.

அடுத்த இடங்களான ஆறாவது இடத்தில் ரெடி, ஏழாவது இடத்தில் மங்காத்தா, எட்டாவது இடத்தில் டிரான்ஸ்போர்மர்ஸ் 3, ஒன்பதாவது இடத்தில் தூக்குடு, பத்தாவது இடத்தில் மிலேகி தோபரா ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • AMR Tuesday, 20 December 2011 06:36 PM

    எல்லா கூத்தும் சில காலம் மட்டுமே ...............பிறப்பு இளமை முதுமை இறப்பு இதுதான் உலகின் நியதி ...............இதனை யாரால் மற்ற முடியும்.

    Reply : 0       0

    zain naseem Tuesday, 20 December 2011 08:39 PM

    வாழும் வரை போராட வேண்டும் நண்பரே.

    Reply : 0       0

    janoovar Thursday, 22 December 2011 08:31 PM

    வெற்றி தொடரும் தலைவா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X