Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 11 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், தனது மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'கோச்சடையான்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில், குறித்த திரைப்படத்தில் ரஜினியின் ஜோடி யார் என்று பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் அப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குனர் சௌந்தர்யா, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கோச்சடையானின் கதாநாயகி என்று பல நடிகைகளின் பெயர்களை வியூகத்தின் அடிப்படையில் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்தன. ஆரம்பத்தில் அனுஷ்கா, அடுத்து தீபிகா படுகோன், கடைசியாக வித்யா பாலன் என பலரையும் ரஜினிக்கு ஜோடியாக்கிப் பார்த்துவிட்டார்கள்.
இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி. அவர் இதுகுறித்து கருத்து கூறுகையில், 'கோச்சடையான் திரைப்படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவரைச் சந்தித்து இந்தப் படம் குறித்து பேசினேன். ரஜினி படத்தில் நடிப்பதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தின் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்கிறார்' என்றார்.
செம்பகம் Thursday, 12 January 2012 02:15 PM
யாரப் போட்டாலும் நடிப்பு திறனிருந்தா சரிதான் ரஜினி சார்ட படமின்னடாதால ஒருவேளை வெற்றி கிடைக்கலாம் போல்...
Reply : 0 0
raja Wednesday, 18 January 2012 06:59 AM
tamil tirai ulagirkitkku nulainda booliwood nadigai katrina kaif avargalukku engal valttukkal...........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago