2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வித்தியாசமான அஜித் விரைவில்...

Menaka Mookandi   / 2012 ஜனவரி 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விஷ்ணுவர்தன் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்த திரைப்படம் பில்லா. எதிர்பாராத காரணங்களினால் பில்லா 2 திரைப்படத்தை இயக்க முடியாதுள்ளதாக கூறியுள்ள விஷ்ணுவர்தன், மீண்டும் அஜீத்தை நாயகனாக வைத்து திரைப்படமொன்றை இயக்கவுள்ளார். இதில் வித்தியாசமான அஜீத்தைப் பார்க்க முடியும் என்று கூறி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார் விஷ்ணுவர்தன்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'அஜீத் சேரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜீத் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

புதிய திரைப்படத்தின் கதாநாயகியாக அமலாபோல், அனுஷ்கா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தத் தகவல்களில் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் தான் அந்தந்த கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்று தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் ஆரம்பமாகும்.

அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்' என்று கூறியுள்ளார் விஷ்ணுவர்தன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X