2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூக்கும் மூக்கும் முட்டாது முத்தமிட்ட விஜய்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 23 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சங்கர் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக 'நண்பன்' மிக வேகமாகப் ஓடிக்கொண்டிருப்பதானது திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றுள்ளது.

இவ்வாறான திரைப்படங்களில் விஜய் தொடர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறுவதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் நண்பனைப் பார்க்க அலை மோதுவதை திரையரங்குகளில் காண முடிகிறது.

நண்பன் படம் வசூலில் அள்ளிக் கொண்டிருப்பதை தமிழ்த் திரையுலகமும் கூட சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,

'நண்பன் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான் நடித்து வெளியான திரைப்படங்களை விடவுட் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் 3 இடியட்ஸ் பார்த்த போது மிகவும் பிடித்தது.

அதனால் அதன் ரீமேக்கில் நடித்தேன். இவ்வாறாக கதாபாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அமைய வேண்டும். நண்பன் படத்தில் அது அமைந்தது. இதில் அக்ஷன், பன்ச் வசனம் இல்லை. பத்து பேரை அடித்து சண்டை போடுவது ஒரு வகை ஹீரோயிசமாக இருந்தாலும் நண்பன் பட கதாபாத்திரம் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது நண்பன் படத்தில் நிறைவேறியது. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்.

நண்பன் படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். அதேசமயம், நேருக்கு நேராக முத்தம் கொடுக்கவில்லை. மாறாக சாய்த்துக் கொடுத்ததால், மூக்குடன் மூக்கு இடிக்கவில்லை. ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி பகிடிவதைகளில் அவை நடப்பவை தான். படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் எனக்கு நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் படத்தில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமானத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் விஜய்.


You May Also Like

  Comments - 0

  • riswan Tuesday, 24 January 2012 01:03 AM

    இதெல்லாம் ஒரு புலப்பா!! எல்லா கலாச்சாரத்தையும் அழித்துவிடும் இந்த சினிமாவுக்கு எதிராக எந்த சீர்திருத்த இயக்கங்களும் இல்லையோ!!!

    Reply : 0       0

    batti Tuesday, 24 January 2012 02:50 AM

    all is well............

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Tuesday, 31 January 2012 11:48 PM

    படம் பார்ப்பவர்களுக்கு பேன்ட் கழற்றும் சீன் தவறாக தெரியவில்லையா?

    Reply : 0       0

    Jasmin Friday, 03 February 2012 08:38 PM

    ஏ... மச்சான்! இலியானா கழட்டலயே ? என்டு வேதனையா இருக்கா?
    அவளும் கலட்டி இருந்தா அது தமிழ் படம் இல்ல அது......!

    Reply : 0       0

    saran Thursday, 16 February 2012 10:48 PM

    nice flm

    Reply : 0       0

    dayani Friday, 30 March 2012 04:40 AM

    தளபதி அழகாகதான் நடிசிருக்காரு அத பத்தி யாரும் கவலை படத்தேவையில்லை நீங்க சம்பளம் கொடுக்கிற இல்லை. பன்னாடைகள் உங்க வேலைய நீங்க பாருங்க கழுதைகள் ..நீ முதலில் sampathi பிறகு யாருக்கும் சொல் ஓகே .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X