Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' திரைப்படத்தில் ஏற்கெனவே பெரிய நட்சத்திரங்கள் ரஜினியுடன் கை கோர்த்துள்ள நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார்.
ரஜினிக்கு அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். 'கோச்சடையான்' திரைப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது டிவிட்டர் இணையத்தில் 'கோச்சடையான் திரைப்படத்தில் சரத்குமார் அங்கிள் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 'ராணா' படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் இந்த திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நடிகை சினேகா, சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கெனவே ஆதி, சினேகா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேத்ரீனா நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
neththiyadi.. Monday, 30 January 2012 04:02 AM
இப்ப எல்லாம் மார்க்கெட் தனக்கு இல்லை தெரிஞ்சு போச்சு அதன் இப்படியாவது ஒட்டிக்கொள்ளலாம் என்று ........ ஏதோ சுப்பர் ஸ்டார் மதிப்ப கெடுக்காம இருந்த சரிதான்.
Reply : 0 0
anfash Monday, 13 February 2012 12:38 PM
நம்மளுக்கு என்ன செய்ய முடிமோ அத மட்டும் தான் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago